108 அடியை எட்டிய மேட்டூர் அணை; கர்நாடகாவில் நீர் திறப்பு குறைப்பு

தமிழகம்
Updated Aug 14, 2019 | 14:46 IST | Times Now

காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Mettur dam storage touches 108 feet
மேட்டூர் அணை 108 அடியை எட்டியுள்ளது  |  Photo Credit: Twitter

மேட்டூர்: இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 75 டிஎம்சியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காகப் 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படுவதால் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நீர் வரத்தினை தொடர்ந்து கண்காணித்து, தேவைப்பட்டால் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி தமிழக எல்லையில் நீர் வரத்து விநாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 40 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வந்தாலும் பரிசல்கள் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை ஏழாவது நாளாக தொடர்கிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இருப்பினும், இரு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. தற்போது, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீர் விநாடிக்கு 62,000 கன அடியாக உள்ளது.

NEXT STORY
108 அடியை எட்டிய மேட்டூர் அணை; கர்நாடகாவில் நீர் திறப்பு குறைப்பு Description: காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...