லிங்கா பட பாணியில் தொலைந்த ஜமீன் கோவில் மரகத லிங்கம். இரண்டு ஆண்டுகள் கழித்து மீட்பு!

தமிழகம்
Updated May 16, 2019 | 15:36 IST | Times Now

திருவண்ணாமலையில் வேட்டலம் ஜமீன் வளாகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட மரகத லிங்கம் தற்போது அதே வளாகத்தில் குப்பையில் மீட்க்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

vettavalam jameen maragatha lingam
vettavalam jameen maragatha lingam  |  Photo Credit: Twitter

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வேட்டலம் ஜமீன் கோட்டை வளாகத்தில் உள்ள மனோன்மணியம்மன் கோவிலில் இருந்த மரகத லிங்கம் திருடப்பட்டது. அதிகாலை பூஜைகள் நடத்த கோவில் நடையைத் திறந்தபோது மரகத லிங்கம் திருடப்பட்டது தெரியவந்தது. கோவிலின் பின்பக்க சுவரைத் துளையிட்டு மரகத லிங்கத்தை யாரோ திருடிச் சென்றிருக்கின்றனர். அதனுடன் அம்மனின் ஒரு கிலோ வெள்ளி கிரீடம், வெள்ளி பாதம், தங்கத்தாலி போன்ற நகைகளும் திருடு போனது.

அதன்பிறகு  வேட்டலம் போலீசார் நடத்திய விசாரணையில் எந்தவிதமான தகவலும் கிடைக்காததால் இந்த வழக்கை பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜமீனில் பணிபுரியும் பணியாளர்கள், கோவில் நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் லிங்கம் கிடந்ததாக ஜமீன் ஊழியர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் அதிகாரிகள், ஜமீன் மகேந்திர பந்தாரியர், கோவில் குருக்கள் ஆகியோரிடம் விசாரித்தப் பிறகு இது திருடப்பட்ட மரகத லிங்கம்தான் என உறுதி செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் முன்பு தொலைந்து போன லிங்கத்தை யார் தற்போது அங்கே போட்டது என்பது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த லிங்கம் இதற்கு முன்பே 1986-ஆம் ஆண்டு இதேபோல திருடப்பட்டு பின் ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள் ஜமீன் வளாகத்தில். அரை அடி உயரம் இருக்கும் இந்த மரகத லிங்கம் சுமார் ஐந்து கோடி மதிப்பு கொண்டது என்று கூறப்படுகிறது.
 

NEXT STORY
லிங்கா பட பாணியில் தொலைந்த ஜமீன் கோவில் மரகத லிங்கம். இரண்டு ஆண்டுகள் கழித்து மீட்பு! Description: திருவண்ணாமலையில் வேட்டலம் ஜமீன் வளாகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட மரகத லிங்கம் தற்போது அதே வளாகத்தில் குப்பையில் மீட்க்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola