ஊழல் நாடகத்தில் மக்கள்நீதிமய்யம்  பங்கேற்காது - இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் அறிக்கை

தமிழகம்
Updated Sep 22, 2019 | 10:59 IST | Times Now

வரும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

kamalhaasan
கமல்ஹாசன்  |  Photo Credit: Twitter

தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதனால் அந்த பதவி காலியானது. கடந்த ஜுன் மாதம் விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்கி,  செப்டம்பர் 30-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. 

இந்த தேர்த்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,  ‘’பழைய கொள்ளையர் கட்சிகளையும் அதன் கூட்டுப் பங்காளிகளையும் பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியில் இருந்து அகற்றி, 2021 ஆட்சிப் பொறுப்பினை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மையம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது

 நாங்குநேரியில் விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகையுமாவது தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் ஆட்சியில் இருந்தவர்களும் இருப்பவர்களும் போடும் இடைத்தேர்தல் என்னும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள்நீதிமய்யம்  பங்கேற்காது’’ என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 

NEXT STORY
ஊழல் நாடகத்தில் மக்கள்நீதிமய்யம்  பங்கேற்காது - இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் அறிக்கை Description: வரும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
உங்கள் மருமகளை வரவேற்க மற்றொருவர் மகளை கொல்வதா?- சுபஸ்ரீ மரணத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்
உங்கள் மருமகளை வரவேற்க மற்றொருவர் மகளை கொல்வதா?- சுபஸ்ரீ மரணத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு