வேலூர் மக்களவை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை!

தமிழகம்
Updated Jul 18, 2019 | 16:23 IST | Times Now

மக்களின் நம்பிக்கையினை காப்பது என்பது மிக முக்கியம் எனவே அப்பணிகளில் மக்கள் நீதி மய்யம் முழுக்கவனம் செலுத்தவிருக்கிறது.

MNM leader kamal hassan, மக்கள் நீதி் மய்யம் தலைவர் கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  |  Photo Credit: Twitter

வேலூர்: வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடவில்லை என ஏற்கெனவே அறிவித்தவிட்டது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யமும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல்களின் போது வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பணப்பட்டுவாடா சட்டவிரோமாகவும் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் நடைபெற்றதாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது.

 Makkal Needhi Maiam

பின்னர் இந்திய ஜனாதிபதி அவர்களின் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்தால் வேலூருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேற்குறிப்பிடப்பட்ட வழக்குகளில் எவ்வித முன்னேற்றமோ முடிவுகளோ அடைவதற்கு முன்னரே மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்களின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கின்றது.

இச்சூழலில் மக்களின் நம்பிக்கையினை காப்பது என்பது மிக முக்கியம் எனவே அப்பணிகளில் மக்கள் நீதி மய்யம் முழுக்கவனம் செலுத்தவிருக்கிறது. எதிர் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் மிகுந்த உத்வேகத்துடன் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாலும் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கட்சியின் செயற்குழுவால் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...