தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; செப்டம்பர் 15ல் அறிக்கை வேண்டும் - சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!

தமிழகம்
Updated Jun 27, 2019 | 15:09 IST | Times Now

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு சிபிஐ இயக்குநர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

tuticorin, தூத்துக்குடி
மூடப்பட்ட ஸ்டெரிலைட் ஆலை  |  Photo Credit: Twitter

மதுரை:தூத்துக்குடியில் ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது குறித்த வழக்கின் தற்போதைய நிலை தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 15ம் தேதி தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதியன்று, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற பேரணியில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நான்கு மாதங்களில் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே உத்தரவிடப்பட்டது. எனினும், சிபிஐயின் விசாரணை இன்னும் நீள்கிறது.

இந்தநிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு சிபிஐ இயக்குநர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கின் தற்போதைய நிலை குறித்து செப்டம்பர் 15ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

NEXT STORY
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; செப்டம்பர் 15ல் அறிக்கை வேண்டும் - சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு! Description: துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு சிபிஐ இயக்குநர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles