ரயில் பெட்டி வடிவில் கிளாஸ் ரூம்.. அசத்தும் மதுரை பள்ளி

தமிழகம்
Updated Jun 12, 2019 | 19:06 IST | Times Now

பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் மாணவ, மாணவிகள் மத்தியில் அவர்களை வசீகரிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் செய்துள்ள இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

looks of coaches of a train in madurai
looks of coaches of a train in madurai  |  Photo Credit: ANI

மதுரை: மதுரையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் ஒன்று ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ள மீனாட்சி பஜாரில் செயல்பட்டு வருகிறது மதுரா காலேஜ் மேல்நிலைப்பள்ளி. இதே வளாகத்திற்குள் தொடக்கப்பள்ளியும் உள்ளது. இங்குள்ள வகுப்பறைகள் ரயில் பெட்டியை போன்று வடிவமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

வகுப்பறையின் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் நிஜ ரயிலை போன்றே உள்ளது. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் மதுரை டூ சென்னை செல்லும் ரயில் என முன் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

looks of coaches of a train

இதுவரை பள்ளிக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களை மட்டுமே பார்த்து ரசித்த மாணவ, மாணவிகள் தற்போது நிஜ ரயில் உட்கார்ந்து பாடம் படிப்பது போன்று உணர்கின்றனர்.

looks of coaches of a train

பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் மாணவ, மாணவிகள் மத்தியில் அவர்களை வசீகரிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் செய்துள்ள இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.  
 

NEXT STORY