பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடைசெல்லும் - உயர்நீதிமன்றம்

தமிழகம்
Updated Jul 11, 2019 | 17:57 IST | Times Now

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தடையை நீக்க வேண்டும் என்று தொடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கானத் தடை செல்லும்
பிளாஸ்டிக் பொருட்களுக்கானத் தடை செல்லும் 

தமிழகத்தில் ஜனவரி-1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளால் இயற்கை சீரழிவதோடு மிருகங்களுக்கும் பல பிரச்னைகள் இதனால் ஏற்படுகிறது என்பதால் 14 வகையான மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளை தடை வித்தித்தது தமிழக அரசு. இதனால் இந்த வகைப் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு மிகவும் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி இந்த தடையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். 

இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அப்போது உயர்நீதிமன்றம் , தமிழக அரசு கொண்டுவந்த பிளாஸ்டிக் தடை செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. அதாவது 14 வகையான மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளுக்கான தடை செல்லும் என்றும் இந்த பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்தாலோ பயன்படுத்தினாலோ குற்றம் எனவும் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் என்னென்ன?

நூறுவருடங்கள் ஆனாலும் மக்காத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், டீ குடிக்கப் பயன்படுத்தப்படும் கப்கள், குடிநீர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், பிளாஸ்டிக் ஷீட்டுகள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவைகளுக்கு தடை விதித்துள்ளது தமிழக அரசு. அதேசமயம் மறுசுழற்சி செய்யத் தகுதியான பிளாஸ்டிக்குகளில் செய்யப்பட்ட பொருட்கள், பால், தயிர், எண்ணைய் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் பைகள், வனத்துறை, தோட்டக்கலைத்துறையில் நாற்றாங்காலுக்காக பயன்படுத்தப்படும் பைகள், விரிப்புகள், மக்கிப் போகும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளுக்கும் அரசு தடை விதிக்கவில்லை. இவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

NEXT STORY
பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடைசெல்லும் - உயர்நீதிமன்றம் Description: பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தமிழகத்தில் உள்ள பிளாஸ்டிக் தடையை நீக்க வேண்டும் என்று தொடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை