நளினியின் பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

தமிழகம்
Updated Sep 12, 2019 | 12:52 IST | Times Now

இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சனை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் நளினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Nalini, நளினி
நளினி  |  Photo Credit: PTI

சென்னை: மகள் திருமணத்திற்காக பரோலில் வெளிவந்துள்ள நளினிக்கு அக்டோபர் 15-ஆம் தேதி வரை பரோலை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மகள் திருமணத்திற்காக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினியை ஒரு மாதம் பரோலில் விடுவிக்க ஜூலை 5-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஜூலை 25-ஆம் தேதி பரோலில் வந்த நளினிக்கு மேலும் மூன்று வாரம் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சனை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் நளினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்பில் அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, பரோல் நீட்டிப்பு வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டு அதனை மேலும் மூன்று வாரங்கள் நீட்டிப்பு செய்ததால் மீண்டும் பரோலை நீட்டிக்க இயலாது என்று நீதிபதிகள் மறுத்துவிட்டனர். 

இதனை தொடர்ந்து நளினி தரப்பில் மனுவைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

NEXT STORY
நளினியின் பரோலை அக்டோபர் 15 வரை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு Description: இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சனை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் நளினி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை