மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீடு: தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்ந்தீதிமன்றம் உத்தரவு

தமிழகம்
Updated Sep 07, 2019 | 10:38 IST | Mirror Now

ஜாதி அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீடு போலவே இதையும் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

Madras High Court, சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்  |  Photo Credit: BCCL

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இடஒதுக்கீடு குறித்து எட்டு வாரங்களுக்குள் நிகழ்நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிலையங்களின் காலி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தவும் காலிப் பணியிடங்களை நிரப்பவும் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், மற்றும் அனைத்து இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு ஆகியோர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியுடைய 4,000 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டினர்.

மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016-ன் படி அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் 19 ஏப்ரல் 2017 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். ஜாதி அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீடு போலவே இதையும் முறையாக அமல்படுத்த வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

அவ்வாறு முறையாக அமல்படுத்தாத கல்வி நிலையங்களுக்கும் பட்ஜெட்டில் நிதி மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016-ன் படி 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து,  மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இடஒதுக்கீடு குறித்து எட்டு வாரங்களுக்குள் நிகழ்நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிலையங்களின் காலி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...