ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட் அனுமதி

தமிழகம்
Updated Jul 18, 2019 | 11:22 IST | Times Now

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலை ஸ்டான்லி மருத்துவமையில் இருந்து தனியார் மருத்துவமைக்கு மாற்ற கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட் அனுமதி
ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட் அனுமதி  |  Photo Credit: Twitter

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சவபணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலை தனியார் மருத்துவமைக்கு மாற்றி மருத்துவம் செய்து கொள்ளலாம் என்று கோர் அனுமதி அளித்துள்ளது.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரண் அடைந்த ராஜகோபால் சிறைக்கே செல்லாமல் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அங்கே சிறைக்கைதிகளுக்கான வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 71 வயதாகும் ராஜகோபாலுக்கு  உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதால் செய்றகை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் பொருட்டு அவரது மகன் சரவணன், ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்பதால் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளிக்கவேண்டும் என்று உயிர்நீதிமன்றத்திடம் மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்று இன்று விசாரணை செய்த நீதிபதிகள் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்துள்ளனர். இருப்பினும் ராஜகோபால் மிகவும் கவலைக் கிடமாக இருப்பதால் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது மிகவும் சிக்கலானது என்று ஸ்டான்லி மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.  

ராஜகோபால் வழக்கின் சுருக்கம்: 

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் ஜோசியர் கூறியதால் தனது ஹோட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகளான ஜீவஜோதியை 3-வது மனைவியாக திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டார். இதற்காக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை மூலம் கடத்தி கொடைக்கானல் மலை பகுதியில் வைத்து கொலை செய்த வழக்கில் ராஜகோபால் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின்  விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம். 

மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட அவரது கூட்டாளிகள் 8 பேருக்கும் 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ராஜகோபால் வழக்கை நடத்தி வந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகள் கழித்து  இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வந்தது. அதன்படி, உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை 6 பேருக்கும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஜூலை 7-ஆம் தேதிக்குள் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு செல்ல வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. அதன்படி சென்ற வாரம் ராஜகோபால் உடல் நிலை சரியில்லாதபோதும் ஸ்ட்ரெச்சரில் அழைத்துவரப்பட்டு சரணடைந்தார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...