தபால் வாக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்
Updated May 16, 2019 | 09:00 IST | Times Now

தபால் வாக்கு விவகாரத்தில் அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court, சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்  |  Photo Credit: Twitter

சென்னை: தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டு படிவங்கள், பதிவான வாக்குகள், நிராகரிக்கப்பட்ட படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு தபால் வாக்களிப்பதற்கான படிவம் முறையாக வழங்கப்படவில்லை. சாதாரண காரணங்களுக்காக பலரின் படிவங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1 லட்சம் பேர் தபால் வாக்குகளை செலுத்தவில்லை. இதுவரை தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் எத்தனை பேர் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனர் என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள், பதிவான வாக்குகள், நிராகரிக்கபட்ட படிவங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

NEXT STORY
தபால் வாக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Description: தபால் வாக்கு விவகாரத்தில் அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola