’மக்களின் கணிப்பு 23ம் தேதி தெரிந்துவிடும்’ - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழகம்
Updated May 20, 2019 | 14:52 IST | Times Now

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று முக்கால்வாசி கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

election 2019, தேர்தல் 2019
மு.க.ஸ்டாலின்   |  Photo Credit: Twitter

சென்னை: தேர்தலுக்கு முந்தையை ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் சாதகமோ, பாதகமோ அதை திமுக பொருட்படுத்துவதில்லை என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேற்று முடிவடைந்தது. வருகின்ற 23ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில், மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று முக்கால்வாசி கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆனால், தமிழகத்தைப் பொறுத்த வரையில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவிலான வெற்றியை தட்டிச் செல்லும் என்றும் இந்த கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வருகின்ற 23ம் தேதியன்று வெளியான பிறகே எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும். கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பொறுத்த வரையில் அது திமுகவிற்கு சாதகம் என்றாலும், பாதகம் என்றாலும் அதைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை திமுக. எங்களுக்கு தலைவர் கலைஞர் எப்போதும் வழிகாட்டியாக இருக்கிறார்.  அவர் இதை பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஓரிரு நாட்களின் மக்களின் கணிப்பு என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். 

NEXT STORY
’மக்களின் கணிப்பு 23ம் தேதி தெரிந்துவிடும்’ - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் Description: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று முக்கால்வாசி கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
Loading...
Loading...
Loading...