திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

தமிழகம்
Updated May 15, 2019 | 14:56 IST | Times Now

முக்கிய கட்சிகள் இதுவரை 25 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. வாக்குக்கும் சர்வசாதாரணமாக பணம் கொடுப்பதும் நடைபெற்று வருகிறது.

tamil nadu, தமிழ்நாடு
தேர்தல் ஆணையம்  |  Photo Credit: Twitter

மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதன்படி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சியினரும் வாக்குகளுக்கு பணம் கொடுத்து வருவது அதிகரித்துள்ளது. மேலும், பரப்புரைகளின்போது ஒவ்வொரு கட்சியினரும் தங்களின் பலத்தை நிரூபிக்க பணம் கொடுத்து மக்கள் கூட்டத்தை கூட்டுகின்றனர். 

முக்கிய கட்சிகள் இதுவரை 25 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. வாக்குக்கும் சர்வசாதாரணமாக பணம் கொடுப்பதும் நடைபெற்று வருகிறது. இதனால், திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லாததால் இடைத்தேர்தலை ரத்து செய்ய அல்லது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வு, தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட இயலாது. தேவைப்படும் பட்சத்தில் மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. 

NEXT STORY
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி! Description: முக்கிய கட்சிகள் இதுவரை 25 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. வாக்குக்கும் சர்வசாதாரணமாக பணம் கொடுப்பதும் நடைபெற்று வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola