தமிழக உள்ளாட்சி தேர்தல்.. வார்டு ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!

தமிழகம்
Updated Jun 03, 2019 | 12:49 IST | Times Now

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tamil Nadu State Election Commission, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 

சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016 அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியாகியது. இதற்கிடையில் உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்து 5 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. 

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு  பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பெண்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இடஒதுக்கீடானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தேதி ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...