கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து; 3 பேர் மாயம்

தமிழகம்
Updated Sep 12, 2019 | 11:44 IST | Times Now

கொள்ளிடம் ஆற்றில் 40 பேர் சென்ற படகு கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் மாயமாகினர்.

Ariyalur boat accident, அரியலூர் அருகே 40 பேர் சென்ற படகு கவிழ்ந்தது
அரியலூர் அருகே 40 பேர் சென்ற படகு கவிழ்ந்தது 

அரியலூர்: அரியலூரில் கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற படகு விபத்துக்குள்ளானதில் 3 பேர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் கடந்த 8-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டத்தை தொடர்ந்து மேலராமநல்லூர், கீழராமநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு இடையே படகு போக்குவரத்து இயங்கி வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை மாலை படகு மூலம் மேலராமநல்லூருக்கு 40 பேர் ஒரே படகில் கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது.

ஆற்றின் அருகே இருந்த மணல் திட்டில் 20 பேர் தஞ்சமடைந்த நிலையில், தீயணைப்புத்துறை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ஊர்மக்கள் இணைந்து 4 மணிநேரம் போராடி ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கபிஸ்தம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, ராணி உள்ளிட்ட மூன்று பேர் காணவில்லை என்று உறவினர்கள் கூறியதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஒகேனக்கலில் பரிசல் கவிழ்ந்து விபத்து:

இதே போன்ற மற்றொரு சம்பவத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து வெளிநாடு வாழ் இந்தியப் பெண் ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசித்து வரும் மனோ-அஞ்சலாட்சி தம்பதியினர் மகள் மோகிஷா உடன் விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளனர்.

ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மனோ குடும்பத்தினர் கார் ஓட்டுநர் கந்தன் ஆகியோர் மனோகரன் என்பவரின் பரிசலில் பயணித்தனர். அப்போது, நீலகிரி பிளேட் என்ற இடத்தில் பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மனோ, மோகிஷா மற்றும் கந்தன் ஆகியோரை மனோகரன் மீட்டு கரை சேர்த்தார். இருப்பினும், மனோவின் மனைவி அஞ்சலாட்சியை காப்பாற்ற முடியாததால் அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். தடையை மீறி பரிசல் இயக்கிய குற்றத்துக்காக மனோகரன் கைது செய்யப்பட்டார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...