2,600 ஆண்டுக்கு முன்னரே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்... வரலாற்றை மாற்றும் கீழடி ஆராய்ச்சி முடிவுகள்!

தமிழகம்
Updated Sep 21, 2019 | 16:28 IST | Times Now

சங்ககாலத் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பதற்குச் சான்றாகப் பெயர்கள் பொறிக்கப்பட்ட பானைகள் கீழடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீழடி ஆராய்ச்சி முடிவுகள், Keeladi excavation results
கீழடி ஆராய்ச்சி முடிவுகள்   |  Photo Credit: Twitter

கீழடியில் தமிழக அரசு சார்பில் 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சியால் வரலாற்று சிறப்புமிக்க பல தகவல்கள் கிடைத்துள்ளன.  

மதுரையில் இருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் கடந்த  2014-ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு அகழ்வாய்வைத் தொடர தமிழ்நாடு தொல்லியல் துறை முடிவுசெய்து, அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டுவந்தது. 

keeladi

 நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. சென்னை எழும்பூர் அருங்காட்சியத்தில் நடந்த விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழ்நாடு தொல்லியல் துறை செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆய்வு முடிவுகள் கையேடாக வெளியிட்டனர். 

Keeladi Book Release

இந்த ஆராய்ச்சி முடிவுகளில் சங்க காலம் என்பது முந்தைய கணிப்புகளைவிட மேலும் 400 ஆண்டுகள் பழைமையானதாக இருக்க வாய்ப்பிருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்ககாலத் தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதற்குச் சான்றாகப் பெயர்கள் பொறிக்கப்பட்ட பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு எழுத்தறிவு இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. மேலும் பானை செய்வதற்கு பெரிய தொழிற்கூடமும் இருந்துள்ளது.  

Keeladi

Keeladi
இந்த அகழ்வாராய்ச்சியில் பானைகள், எலும்பால் செய்யப்பட்ட கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள், தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கம் மற்றும் பகடைக் காய்கள் போன்றவையும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

keeladi

keeladi

Keeladi

இந்த கீழடி ஆராய்ச்சியில் கால்நடைகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திமிலுள்ள காளைகள், பசுக்கள், எருமைகள், ஆடுகள் வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. வைகை நதியோர இந்த கீழடி நாகரிகம் சிந்து நாகரிகத்தோடு ஒத்திபோவதாகவும் தெரியவருகிறது.

keeladi

மதுரை மற்றும் அதன் பண்டை நாகரிகத்தை பிரதிபலித்த புகழ்பெற்ற 'காவல் கோட்டம்' நூலின் எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் இந்த ஆராய்ச்சி முடிவுகளை பற்றி கூறும்போது கீழடியை   பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் பாட்நகர், சனோலி ஆய்வுகள் போலவே கீழடி ஆராய்ச்சியிலும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.       

NEXT STORY
2,600 ஆண்டுக்கு முன்னரே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்... வரலாற்றை மாற்றும் கீழடி ஆராய்ச்சி முடிவுகள்! Description: சங்ககாலத் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பதற்குச் சான்றாகப் பெயர்கள் பொறிக்கப்பட்ட பானைகள் கீழடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
உங்கள் மருமகளை வரவேற்க மற்றொருவர் மகளை கொல்வதா?- சுபஸ்ரீ மரணத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்
உங்கள் மருமகளை வரவேற்க மற்றொருவர் மகளை கொல்வதா?- சுபஸ்ரீ மரணத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு