காவிரி நீர் வருமா, வராதா? - திறந்து விட சொல்லும் காவிரி மேலாண்மை ஆணையம்; மழையைப் பொறுத்துதான் எனும் கர்நாடகா!

தமிழகம்
Updated Jun 25, 2019 | 15:20 IST | Times Now

ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதங்களுக்கு உரிய 40.43 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

kaveri water, காவிரி நீர்
காவிரி ஆறு  |  Photo Credit: Twitter

டெல்லி: காவிரியில் நீர் திறப்பதற்கு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரி நீர் திறப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் சேவா பவனில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

தமிழகத்தில் இருந்தும் தமிழக அரசு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கர்நாடகவிற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தது தமிழக அரசு. 

மேலும், ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதங்களுக்கு உரிய 40.43 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்துக்கு உரிய நீரை காவிரியில் இருந்து திறந்து விட கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மழை மற்றும் காவிரி நீர்வரத்து ஆகியவற்றை பொறுத்து அதற்கான அளவிலான நீரை திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மழை அளவைப் பொறுத்து திறந்து விடுகிறோம் என்று தெரிவித்துள்ளது கர்நாடக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
காவிரி நீர் வருமா, வராதா? - திறந்து விட சொல்லும் காவிரி மேலாண்மை ஆணையம்; மழையைப் பொறுத்துதான் எனும் கர்நாடகா! Description: ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 2 மாதங்களுக்கு உரிய 40.43 டிஎம்சி காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Loading...
Loading...
Loading...