தேர்தல் முடிவுக்குப் பின் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசியது இதுதான்!

தமிழகம்
Updated May 24, 2019 | 13:01 IST | Times Now

தேர்தல் முடிவுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமல் ஹாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Kamalhaasan talks about Makkal Needhi Maiam's part in loksabha election and tn by election 2019
Kamalhaasan talks about Makkal Needhi Maiam's part in loksabha election and tn by election 2019  |  Photo Credit: Times Now

நடந்து முடிந்த இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. கட்சி தொடங்கி 14 மாதங்களே ஆன நிலையில் அவர்கள் சந்தித்த முதல் தேர்தலில் வெற்றிபெறா விட்டாலும் பல இடங்களில் மூன்றாவது இடம் வந்தனர். மக்களவைத் தேர்தலில் 3.79% பெற்றிருக்கிறது. தேர்தல் முடிவுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமல் ஹாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

14 மாதங்களே ஆனக் குழந்தையை வாக்காளர்கள் வாரியணைத்து ஓடவிட்டுப் பார்ப்பார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு மிக நேர்மையாக ஓட்டு போட்டு, எங்களிடம் எங்களது கடமையைத் தவிர மற்ற எதையும் எதிர்பார்க்காமல் வாக்களித்த மக்களுக்கும், அந்த வாக்குகளை பெறுவதற்கு நேர்மையாக ஓட்டுக்களைக் குவித்திருக்கும் இவர்களை நான் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெற்றியாளர்களாகத்தான் பார்க்கிறேன். அதுவும் இவர்களை நாளைய வேட்பாளர்களாகப் பார்க்கிறேன். அவர்களுக்கு ஒத்துழைப்பையும் வரவேற்பையும் அளித்த தமிழக மக்களுக்கு என் வாழ்த்துக்கள், என்று கூறியவர் பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசியவர், நாங்கள் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்ப்பவர்கள் இல்லை, அதனை தமிழ்நாட்டில்தான் வைக்க வேண்டும் என்று கூறுகிவதைத்தான் எதிர்கிறோம். எங்களது விவசாயிகளை பாதிக்காத திட்டங்களைத்தான் நாங்கள் கேட்கிறோம். மற்ற நாடுகள் போல மக்கள் புழங்காத இடங்களில் அவர்கள் இந்தத்திட்டங்களை ஏற்படுத்தட்டும். ஆனால் வயக்காட்டில், மக்கள் புழங்கும் இடங்களில் இப்படி செய்வதை எதிர்ப்போன் என்றார். மேலும் இந்த தேர்தல் முடிவுகளை நான் தோல்வியாகப் பார்க்கவே இல்லை, வெற்றிப்பெருமிதத்தில் தான் உங்களிடம் பேசிகிறேன். இனிமேலாவது நாங்கள் பா.ஜ.கவின் பி டீம் என்று கூறாதீர்கள். நாங்கள் நேர்மையின் ஏ டீன் என்று கூறினார். இந்தத் தேர்தலில் மூலம் நாங்கள் பெரும் ஊக்கம் பெற்றிருக்கிறோம். இதுபோல நேர்மையான வாக்காளர்களை மக்கள் ஏற்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்று தெரிவித்தார்.

தேர்தல் வரும் போகும், இந்தியாவின் எழுச்சி மிகு மாநிலமாக என்றைக்கும் தமிழகத்தை மாற்றவேண்டும் என்பதே எங்களது இலக்கு, நம்பிக்கை.
மக்கள் உங்களுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதனை விடுத்து நீங்கள் பிக்பாஸ், இந்தியன் 2 நடிக்கச் செல்கிறீர்கள் என்ற கேள்விக்கு அரசியல் என்னுடைய தொழில் அல்ல, அதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலைத் தொழிலாகப் பார்ப்பதை மக்கள் நீதி மய்யம் எதிர்க்கிறது. கலை என்னுடைய தொழில், அரசியல் என்னுடைய கடமை என்று பதிலளித்தார்.

NEXT STORY
தேர்தல் முடிவுக்குப் பின் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசியது இதுதான்! Description: தேர்தல் முடிவுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமல் ஹாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
Loading...
Loading...
Loading...