இன்று மீண்டும் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கமல்ஹாசன்!

தமிழகம்
Updated May 17, 2019 | 07:55 IST | Times Now

கரூரில் கமல் பிரச்சாரத்துக்கு விதிக்கப்பட்டத் தடையை மாவட்ட நிர்வாகம் நேற்று நீக்கியது.

kamalhaasan
kamalhaasan  |  Photo Credit: ANI

பல சர்ச்சைகளுக்கு நடுவே மீண்டும் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தை இன்று மாலை கமல்ஹாசன் தொடங்குகிறார். 

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும்  19-ஆம் தேதி நடைபெறுகிறது. இவற்றோடு தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்கிறது. அதில் அரவக்குறிச்சியும் ஒன்று. கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் சீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தபோது  இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியிருந்தார். இதற்கு பா.ஜ.க, இந்து அமைப்புகள்  நாடு முழுவதும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது. கமலின் நாக்கை வெட்டப்போகின்றனர் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். நமது அம்மா நாளிதழ் கமலிக் கொச்சப்படுத்தி ஒரு கட்டுரையும் எழுதியது.

அரவக்குறிச்சியில் கமலுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனால் பாதுகாப்புக் காரணங்களால் அடுத்த இரண்டு நாட்களுக்கு பிரச்சாரம் செய்யாமல் இருந்த கமல்ஹாசன் நேற்று திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நான் கூறியது சரித்திர உண்மை, என்று மீண்டும் இதுபற்றிக் கருத்து கூறியிருந்தார்.

கரூரில் கமல் பிரச்சாரத்துக்கு விதிக்கப்பட்டத் தடையை மாவட்ட நிர்வாகம் நேற்று நீக்கியது. இதனால் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் தென்னிலையில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் கமல்ஹாசன். இதனைத் தொடர்ந்து இரவு வேலாயுதம்பளையத்திலும் பேசவிருக்கிறார். இவ்வளவு சர்ச்சைகளுக்கு இடையே கமல் மீண்டும் அரவக்குறிச்சியில் பேசப்போவது மிகவும் முக்கியம் வாய்ந்த அரசியல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. 

NEXT STORY
இன்று மீண்டும் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கமல்ஹாசன்! Description: கரூரில் கமல் பிரச்சாரத்துக்கு விதிக்கப்பட்டத் தடையை மாவட்ட நிர்வாகம் நேற்று நீக்கியது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola