மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு!

தமிழகம்
Updated May 14, 2019 | 19:47 IST | Times Now

கமலின் இந்த கருத்து இந்திய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களையும் கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

tamil nadu, தமிழ்நாடு
கமல்ஹாசன்  |  Photo Credit: Twitter

அரவக்குறிச்சி: தமிழகத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரச்சாரத்தின்போது  இந்து தீவிரவாதி என்று பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து...அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியிருந்தார். காந்தியின் கொள்ளுப்பேரனான நான் அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன் என்று பேசினார்.

கமலின் இந்த கருத்து இந்திய அளவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களையும் கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பாஜக, அதிமுக தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

kamal haasan

இந்நிலையில் கமல்ஹாசன் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறி குற்றவியல் சட்ட 153ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் பிரச்சினையை உருவாக்கியதாகவும் 295ஏ பிரிவின் கீழும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.  இதேபோன்று டெல்லி உட்பட பல இடங்களில் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...