திருப்பரங்குன்றம்; பொதுக்கூட்ட மேடையில் கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு!

தமிழகம்
Updated May 15, 2019 | 22:55 IST | Times Now

திருப்பரங்குன்றம் பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு அவர் வந்த போது அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டுள்ளது.

tamil nadu, தமிழ்நாடு
கமல்ஹாசன்  |  Photo Credit: Twitter

மதுரை: திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேச வந்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட போது, கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசியிருந்தார். மேலும், அது மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சே என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்து அரசியல் களத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இக்கருத்துக்கு எதிரான விமர்சனங்களால் கமல்ஹாசன் தனது பிரச்சாரங்களை ரத்து செய்திருந்தார். இன்று மீண்டும் அவர் திருப்பரங்குன்றத்தில் பரப்புரையில் ஈடுபட்டார். திருப்பரங்குன்றம் பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு அவர் வந்த போது அவரை நோக்கி செருப்பு வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து காலணியை வீசியதாக பாஜகவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கண்டறியப்பட்டனர். காலணி வீசிய 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

NEXT STORY