'நாடாளுமன்றம் கூடியதும் எங்கள் செயல்பாடுகளைப் பாருங்கள்’ - திருச்சியில் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழகம்
Updated Jun 10, 2019 | 22:51 IST | Times Now

சிலை திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலுன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, திருநாவுக்கரசர், பாரிவேந்தர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 

tamil nadu, தமிழ்நாடு
மு.க.ஸ்டாலின்   |  Photo Credit: Twitter

திருச்சி: திருச்சியில் இன்று கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோரின் திருவுருவச் சிலைகளை இன்று திறந்து வைத்தார் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின்.

குழுமியிருந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் முன்னிலையில் தலைவர் கலைஞர் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்த சிலை திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலுன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, திருநாவுக்கரசர், பாரிவேந்தர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 

முன்னதாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அன்பில் கிராமத்தில் அவரது சிலையையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ``இந்தி மொழி திணிப்பு விஷயத்தில் மத்திய அரசு பின் வாங்க காரணமே திமுக தான். பொய் பிரச்சாரம் செய்து வென்றோம் என ஒரு குருவி கூட்டம் சொல்கிறது. அப்படியெனில், மோடி வெற்றி பெற்றது எப்படி?.  திமுகவின் வெற்றி பெற்ற எம்.பிக்கள், அதிமுக எம்.பிக்களை போல ஜடங்களாக, அடிமையாக இருக்க மாட்டோம். உறவுக்கு தோள் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற அண்ணாவின் வார்த்தைகளுக்கு ஏற்ப செயல்படுவோம்.  நாடாளுமன்றம் கூடட்டும். எங்கள் செயல்பாடுகளை அங்கே பாருங்கள். தமிழகத்தில் ஒரு இடம் கூட பாஜக ஜெயிக்காதற்கு காரணம், தமிழகத்திற்கு அவர்கள் தொடர்ந்து செய்த துரோகங்கள் தான்.  நீட் தேர்வால் மாணவர்கள் உயிழக்க காரணம் மத்திய-மாநில அரசுகள் தான்” என்று உரையாற்றினார். 

NEXT STORY
'நாடாளுமன்றம் கூடியதும் எங்கள் செயல்பாடுகளைப் பாருங்கள்’ - திருச்சியில் மு.க.ஸ்டாலின் உரை! Description: சிலை திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலுன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, திருநாவுக்கரசர், பாரிவேந்தர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை