கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு, புதிய தலைமைச் செயலாகிறார் கே.சண்முகம் - யார் இவர்?

தமிழகம்
Updated Jun 29, 2019 | 15:43 IST | Times Now

அதிமுக ஆட்சியில் மாற்றப்படாத ஒரே செயலரும் இவரே. ஜெயலலிதா இவரை தொடர்ந்து 2 முறை ஆட்சி அமைத்த போதும் நிதித்துறை செயலர் ஆகவே வைத்திருந்தார்.

Girija Vaidhyanathan, Shanmugam
கிரிஜா வைத்தியநாதன், சண்முகம்  |  Photo Credit: Twitter

தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெறுவதையொட்டி இன்று பதவி ஏற்கிறார் சண்முகம். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்தவர் சண்முகம் இவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி வரை 1985ஆம் ஆண்டு தஞ்சாவூரில் உதவி ஆட்சியராக பணிபுரிந்தவர். சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.

அதன்பிறகு பல்வேறு துறைகளில் இயக்குனராகவும் செயலாளராகவும் பணியாற்றி வந்த சண்முகம், தனது நிர்வாகத் திறமையால் 2010 ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியால் நிதித் துறை செயலராக நியமிக்கப்பட்டார். அதிமுக ஆட்சியில் மாற்றப்படாத ஒரே செயலரும் இவரே. ஜெயலலிதா இவரை தொடர்ந்து 2 முறை ஆட்சி அமைத்த போதும் நிதித்துறை செயலர் ஆகவே வைத்திருந்தார்.

 இதனால் தொடர்ந்து ஒன்பது வருடங்கள் நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார் சண்முகம்.  நாளையுடன் தலைமைச் செயலர் பதவி காலம் முடிவடைந்ததையொட்டி கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுபெறுகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று அவருக்கு பிரிவு உபச்சார விருந்து அளிக்கப்பட்டது. நாளை முதல் சண்முகம் தலைமைச் செயலாளர் பதவியில் அமரும் சண்முகம் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பதவியில் இருப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவருடன் தமிழ்க புதிய டி.ஜி.பியாக திரிபாதியும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

NEXT STORY
கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு, புதிய தலைமைச் செயலாகிறார் கே.சண்முகம் - யார் இவர்? Description: அதிமுக ஆட்சியில் மாற்றப்படாத ஒரே செயலரும் இவரே. ஜெயலலிதா இவரை தொடர்ந்து 2 முறை ஆட்சி அமைத்த போதும் நிதித்துறை செயலர் ஆகவே வைத்திருந்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles