சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட குடிநீர் சேவை நிறுத்தம்!

தமிழகம்
Updated Oct 08, 2019 | 20:21 IST | Times Now

சென்னையின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான நீர் உள்ளதால் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட குடிநீர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது

ஜோலார்பேட்டை-சென்னை ரயில் குடிநீர் சேவை நிறுத்தம்,Jolarpet-Chennai rail water supply stopped
ஜோலார்பேட்டை-சென்னை ரயில் குடிநீர் சேவை நிறுத்தம்   |  Photo Credit: Twitter

சென்னை: வேலூர் அருகே உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொன்றுவரப்பட்ட குடிநீர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் நிலவிய கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் ஜோலார்பேட்டையில் இருந்து கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் 50 வேகன்கள் கொண்ட ரயில் மூலம் நாள்தோறும் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது. தற்போது வரை 159 முறை குடிநீர் கொண்டு வரப்பட்டு 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை ரயிலில் குடிநீர் கொண்டு வருவதுக்கு 8 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாயை ரயில்வே துறைக்கு தமிழ்நாடு அரசு கட்டணமாக செலுத்தி வந்தது. இதுவரை மொத்தமாக ரயில் போக்குவரத்துக்கு ரூ.14 கோடியே 15 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது.  

இந்நிலையில் தற்போது கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது விரைவில் புழல் ஏரிக்கு பிரித்து அனுப்பப்படவுள்ளது. தற்போது பூண்டி, புழல், செம்பரப்பக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 899 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையும் நெருங்கிவரும் நிலையில் சென்னையின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான நீர் உள்ளது உள்ளதால் இந்த குடிநீர் ரயில் சேவை இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...