”ஜே.கே.திரிபாதிVsஜாபர் சேட்” - தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?

தமிழகம்
Updated Jun 26, 2019 | 16:00 IST | Times Now

தமிழகத்தின் தற்போதைய டிஜிபியாக பதவியில் இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. 

DGP, டிஜிபி
ஜே.கே.திரிபாதி  |  Photo Credit: YouTube

சென்னை: தமிழகத்தின் அடுத்த காவல்துறை தலைமை இயக்குனராக ஜே.கே.திரிபாரி நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தற்போதைய டிஜிபியாக பதவியில் இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. 

இதனால், புதிய டிஜிபியை நியமிக்கும் செயல்பாடுகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நியமனத்திற்கு பணிமூப்பு அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரிகளான ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர்சேட், லட்சுமி பிரசாத், அசுதேவ் சுக்லா, மிதிலேஷ்குமார் ஜா, தமிழ்ச்செல்வன், ஆசீஷ் பங்க்ரா, சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, பிரதீப் வி.பிலிப், ரமேஷ் குடவாலா மற்றும் விஜயகுமார் ஆகிய 14 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றினை தமிழ்நாடு அரசு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே யுபிஎஸ்சிக்கு அனுப்பியுள்ளது.

இதில் சிலர் ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் 6 மாதத்தில் ஓய்வு பெற இருப்பவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படக்கூடாது என்பதால், 4 பேர் இந்த வாய்ப்பை இழக்கின்றனர். மீதமிருக்கும் 10 பேரில், ஜே.கே.திரிபாதி மற்றும் ஜாபர் சேட் ஆகியோர் தரவரிசையில் முன்னணியில் உள்ளனர் என்கிறது காவல்துறை வட்டாரம்.

இதனடிப்படையில், தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறை அதிகாரி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையர், சட்ட ஒழுங்கு ஏடிஜிபி ஆகிய பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெயரையே மத்திய அரசும், ஜாபர் சேட் பெயரை மாநில அரசும் பரிந்துரைத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
”ஜே.கே.திரிபாதிVsஜாபர் சேட்” - தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? Description: தமிழகத்தின் தற்போதைய டிஜிபியாக பதவியில் இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles