கோவையில் கைதுகள்: புலனாய்வுத்துறை அதிர்ச்சித் தகவல்!

தமிழகம்
Updated Jun 18, 2019 | 18:31 IST | Times Now

கோயம்புத்தூர்: கோவையில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கோவையில் கைதானவர்கள் கோயில்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்
கோவையில் கைதானவர்கள் கோயில்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்  |  Photo Credit: PTI

கோயம்புத்தூர்: கோவையில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். கோயம்புத்தூர் போலீசார் கடந்த 12 ஆம் தேதி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை டைம்ஸ் நவ்வுக்கு கிடைத்துள்ளது. அதில், கைதுசெய்யப்பட்டவர்கள் கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் போலீசார் இதுதொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர். அதில், அதிர்ச்சிக்குரிய சில புலனாய்வுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையில், இந்த குழுவினர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பரப்புரையை அரபு மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து, மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு வழங்கி வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதாக தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் சனிக்கிழமை அன்று நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒருவரான முகமது அசாருதீன் என்கிற முகமது ஹூசைன் இந்த குழுவுக்கு முளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்ற இருவர் ஹாஜகான், சபியுல்லா எனத் தெரியவந்துள்ளது. 

கோயம்புத்தூர் நகரின் 7 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப்பின் 3 பேரையும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.  இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப் படை தீவிரவாதி ஜகரன் ஹசிமின் தீவிர ஆதரவாளர்கள் இவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

முகமது அசாருதீன், ஜகரன் ஹசிமூடன் பேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். இந்த மூவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிரமான ஆதரவார்கள் என்றும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பரபரப்புரையை சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொண்டு வந்தனர் என்றும் தெரிய வந்துள்ளது.  கைது செய்யப்பட்டவர்களினம் இருந்து 14 செல்போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 மடிக்கணினிகள், 6 மெமரி கார்டுகள், 3 ஹார்டு டிஸ்கள், டாங்குள் மற்றும் சிடிகள் மற்றும் டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அவர்களிடமிருந்து 300 ஏர்கன் குண்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளின் துண்டுபிரசுங்கள் சிலவும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டு அமைப்புகளிடமும் பயங்கரவாத தொடர்பு குறித்து என்ஐஏ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEXT STORY
கோவையில் கைதுகள்: புலனாய்வுத்துறை அதிர்ச்சித் தகவல்! Description: கோயம்புத்தூர்: கோவையில் கைதுசெய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles