எம்.எல்.ஏ. விடுதியில் ஐ.டி. ரெய்டு.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு சம்மன்

தமிழகம்
Updated Apr 15, 2019 | 20:10 IST | Times Now

வாக்குப்பதிவிற்கு 3 நாட்களே உள்ள நிலையில் தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறையில் சோதனை நடந்துள்ளதும், சம்மன் அனுப்பப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minister R.B.Udayakumar, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  |  Photo Credit: Twitter

சென்னை:  எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையில் சோதனை நடத்தியது தொடர்பாக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்கும் விடுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று இரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் எம்.எல்.ஏ. விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். 

சி பிளாக்கில் உள்ள தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அறை உள்ளிட்ட மூன்று அறைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த சோதனை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ஆர்.பி. உதயகுமார் அறையில் நடத்திய சோதனையில் சில துண்டு சீட்டுகளும், வெற்றுப் பைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவிற்கு 3 நாட்களே உள்ள நிலையில் தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறையில் சோதனை நடந்துள்ளதும், சம்மன் அனுப்பப்பட்டுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEXT STORY
எம்.எல்.ஏ. விடுதியில் ஐ.டி. ரெய்டு.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு சம்மன் Description: வாக்குப்பதிவிற்கு 3 நாட்களே உள்ள நிலையில் தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறையில் சோதனை நடந்துள்ளதும், சம்மன் அனுப்பப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
Loading...
Loading...