ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை விவகாரம் - 3 பேராசியர்களுக்கு சம்மன்

தமிழகம்
Updated Nov 18, 2019 | 14:23 IST | Mirror Now

சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகியோரை நேரில் அழித்து விசாரணை மேற்கொள்ள அவர்களுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

Fathima latheef
Fathima latheef  |  Photo Credit: Twitter

ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் குற்றப்பிரிவு போலீசார், 3 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

 கடந்த 8ஆம் தேதி சென்னை ஐஐடியில், கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஃபாத்திமா என்ற முதலாமாண்டு மாணவி தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துண்டார். அப்போது அவரது தற்கொலைக்கு அவர் குறைவான மதிப்பெண் எடுத்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அதன்பின் மாணவியின் செல்ஃபோனில் தனது மரணத்துக்கு பேராசிரியர் சுதர்சன் பத்பநாபன் தான் காரணம் என்று ஒரு செய்தி கிடைத்தபின் அவரைக் கைது செய்க்கோரி மாணவியின் பெற்றோரும் மற்ற தரப்பினரும் கூறிவருகிறார்கள். 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் தமிழகம் வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். பின் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தன்னிடம் இருந்த ஆதாரங்களை போலீசாரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஃபாத்திமா தற்கொலைக்கு 3 பேராசிரியர்கள் கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதனால் இதுதொடர்பாக சந்தேகிக்கப்படும் 3 பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகியோரை நேரில் அழித்து விசாரணை மேற்கொள்ள அவர்களுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. அதனை ஏற்று அவர்கள் விசாரணைக்கு ஆஜார் ஆகி, தங்களது தரப்பு வாதங்களை அளிக்கும் பட்சத்தில் ஃபாத்திமாவின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று நம்பம்பப்படுகிறது. 

NEXT STORY