சென்னை: திமுக தலைமை அறிவித்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் அரியலூர் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட அனிதா நினைவாக அவரது பெயரில் குழுமூரில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அனிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனையடுத்து நூலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட உதயநிதி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. தலைமை அறிவித்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என்றார்.