ஆமா, திமுக குடும்பக் கட்சி தான் - உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு

தமிழகம்
Updated Jun 11, 2019 | 14:02 IST | Times Now

கருணாநிதியின் பேரன், தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதை விட திமுகவின் கடைக்கோடி தொண்டன் என்பதை பெருமையாக கருதுகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Udhayanidhi Stalin, உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்  |  Photo Credit: YouTube

திருச்சி: திமுக குடும்ப கட்சி தான் என்று திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் முரசொலி நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் திருச்சி, உழவர் சந்தை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி பேசுகையில்,  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மட்டும் நான் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எத்தனையோ தேர்தல்களில் தலைவர் கலைஞருக்காக துறைமுகம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன்.  

கடந்த சட்டமன்ற தேர்தலில் எனது நண்பன் அன்பில் மகே‌‌ஷ் பொய்யாமொழிக்காக திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் பிரசாரம் செய்தேன். இந்த தேர்தலில் தலைமையின் அனுமதியுடன் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டேன். என்னைத் தலைவரின் மகன், நடிகர், முரசொலி நிர்வாக இயக்குநர் என அழைத்தார்கள். முரசொலி பதவி என்பது தலைவர் கருணாநிதி உயிரோடு இருக்கும் போது எனக்கு வழங்கப்பட்டது.  இந்த நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். திமுகவில் எந்த ஒரு பொறுப்பும் பதவியும் எதிர்பார்த்து மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அதையெல்லாம் தாண்டி திமுகவின் கடைக்கோடி தொண்டர்களில் ஒருவன் என்கிற பொறுப்பு போதும். 

வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதுதான் எங்களது அடுத்த வேலை. இதற்காக தெருத் தெருவாக இறங்கி பிரசாரம் செய்ய இருக்கிறேன். திமுக குடும்பக் கட்சி என்று அனைவரும் சொல்கிறார்கள். ஆம், திமுக குடும்பக் கட்சிதான். அன்பில் தர்மலிங்கம் தாத்தா, மகேஷின் தாத்தா மட்டுமல்ல, எனக்கும் தாத்தா தான். கருணாநிதி எனக்கு மட்டுமல்ல இங்குள்ள இளைஞர்கள் அனைவருக்கும் தாத்தாதான். அதனால் தான் திமுகவை குடும்பக் கட்சி என்று கூறுகிறார்கள் என உதயநிதி பேசினார். 

NEXT STORY
ஆமா, திமுக குடும்பக் கட்சி தான் - உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு Description: கருணாநிதியின் பேரன், தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் என்பதை விட திமுகவின் கடைக்கோடி தொண்டன் என்பதை பெருமையாக கருதுகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Loading...
Loading...
Loading...