கனமழை எதிரொலி.. திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம்
Updated Oct 29, 2019 | 09:28 IST | Times Now

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

file photo
file photo  |  Photo Credit: Twitter

வேலூர்: தொடர் கனமழை காரணமாக திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வலுவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி குமரிக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்" என்று தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கந்தசாமி அறிவித்தாா். அதேபோல், வேலூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்டர் ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.

NEXT STORY