மக்களவைத் தேர்தலில் திமுகவின் பயணம்! - சுவாரஸ்யத் தகவல்கள்

தமிழகம்
Updated May 22, 2019 | 17:46 IST | Times Now

திமுகவின் மக்களவைத் தேர்தல் பயணத்தின் சில சுவாரஸ்யத் தகவல்கள் சில...

Historical preview about DMK performances in Lok Sabha elections
Historical preview about DMK performances in Lok Sabha elections  |  Photo Credit: Twitter

17-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் எழு கட்டங்களாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் முறையே ஏழு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நாளை மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இங்கே திமுகவின் மக்களவைத் தேர்தல் பயணத்தின் சில சுவாரஸ்யத் தகவல்கள் சில...

  • முதன்முதலாக 1962-ல் நடைபெற்ற 3-வது மக்களவைத் தேர்தலில்  திமுக தனித்துப் போட்டியிட்டு ஏழு இடங்களில் வெற்றிபெற்றது.
  • 1967 தேர்தலில் திமுக 25 இடங்களில் வெற்றிபெற்றது. 1971-இல் முதன்முதலாக காங்கிரஸும் கூட்டணி வைத்து திமுக 23 இடங்களில் வெற்றிபெற்றது. 
  • பின் 77-இல் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 80-இல் 16 இடங்கள், 84-இல் 2, 96-இல் 17 இடங்கள், 98-இல் 5 இடங்கள், 99-இல் 12 இடங்கள், 2004-இல் 16 இடங்கள், 2009-இல் 18 இடங்கள் என வெற்றி பெற்றது
  • இதில் 1989, 1999 மற்றும் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
  • திமுகவில் அதிகமுறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முரசொலிமாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், டி.வேணுகோபால் மற்றும் டி.ஆர்.பாலு. இவர்கள் இதுவரை ஐந்து முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரே தொகுதியில் ஐந்து முறை நின்று ஜெயித்தவர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மட்டுமே. 
  • காங்கிரஸுடன் கடைசியாக 1980-ஆம் ஆண்டுவரை கூட்டணி வைத்தது திமுக. அதன்பிறகு 24 ஆண்டுகள் கழித்து 2004-ஆம் ஆண்டுதான் மீண்டும் கூட்டணி வைத்துக்கொண்டது.
  • அதன்பிறகு மீண்டும்  2014-ஆம் ஆண்டு கூட்டணியில் இருந்து விலகியது. அந்தவருடம் ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.

தற்போது நடந்துவரும் 17-வது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இணைந்துள்ளன. இந்தக்கூட்டணியில் திமுகவுக்கு 20 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும்,   இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  மதிமுக,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் திமுக கொடுத்துள்ளது. 

NEXT STORY
மக்களவைத் தேர்தலில் திமுகவின் பயணம்! - சுவாரஸ்யத் தகவல்கள் Description: திமுகவின் மக்களவைத் தேர்தல் பயணத்தின் சில சுவாரஸ்யத் தகவல்கள் சில...
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை