கமல் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

தமிழகம்
Updated May 16, 2019 | 13:29 IST | Times Now

கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க மறுத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

   High Court Madurai Bench, உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை  |  Photo Credit: PTI

மதுரை:மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவரது பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

 அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா ‘பொலிகாளைக்கு தெரியுமா புனிதமான இந்து மதம்’ என்ற பெயரில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதியது. கமலின் பேச்சுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் கூறி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்திருந்தார். அத்துடன் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பான விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், பிரசாரம் தொடர்பாக எழும் புகார்களுக்கு தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும். அதில், நீதிமன்றம் தலையிடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

NEXT STORY
கமல் பிரசாரத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு Description: கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க மறுத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola