பயங்கரவாதிகள் ஊடுருவல்: பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்

தமிழகம்
Updated Aug 24, 2019 | 12:16 IST | Times Now

தமிழகத்திற்குள் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து மாநிலம் முழுவதும் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

High alert across Tamil Nadu
High alert across Tamil Nadu  |  Photo Credit: Twitter

கோவை: தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தமிழகத்திற்குள் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை நேற்று முன்தினம் தமிழக காவல்துறைக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை தகவலை தெரிவித்தது. அவர்களில் 5 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தகவல் கொடுத்தது. தற்போது 6 பயங்கரவாதிகளும் கோயம்புத்தூரில் பதுங்கியிருப்பதாகவும் உளவுத்துறை தகவலில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வியாழக்கிழமை இரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அனைத்து பகுதிகளிலும் வாகனச் சோதனை, தீவிர ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சிறப்புக் காவல் படையினர், அதி விரைவுப் படையினர் , மாநகரப் போலீஸார் என மொத்தம் 2 ஆயிரம் பேர், கோவை மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கோவை மாநகர ஆணையர் சுமித் சரண் கூறியுள்ளார். சிறப்பு கமாண்டோ படையினர் 10 குழுக்களாக பிரிந்து கோவை மாநகர எல்லைகளை சுற்றி வளைத்து அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளனர்.

Coimbatore on terror alert

பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர். திருச்சி, சேலம், நாமக்கல், ராமநாதபுரம், கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு கமாண்டோ 

 Coimbatore on terror alert

தமிழக கேரள, கர்நாடக எல்லை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகளை சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். மோப்ப நாய்கள் உதவியுடனும் சோதனை நடந்து வருகிறது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த பாதுகாப்பு பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனையும் நடைபெற்று வருகிறது. 

NEXT STORY
பயங்கரவாதிகள் ஊடுருவல்: பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம் Description: தமிழகத்திற்குள் லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து மாநிலம் முழுவதும் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை