தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகம்
Updated Jul 19, 2019 | 17:31 IST | Times Now

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

chennai rain, சென்னை மழை
சென்னை மழை  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவிராசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் சின்னகல்லாறில் அதிகபட்சமாக 10.செ.மீ. மழையும், கடலூரில் 9 செ.மீ. மழையும், அரியலூர் மற்றும் புதுக்கோட்டையில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸூம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

NEXT STORY
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு Description: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola