சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் கனமழை !

தமிழகம்
Updated Oct 20, 2019 | 10:32 IST | Times Now

தஞ்சாவூா், திருவாரூா், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், நீலகிரி, , தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கடலூா் உள்பட16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக் கூடும்.

Heavy rain lashes parts of Chennai
file photo  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, விருதுநகா், கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் எழும்பூர், நந்தனம், சைதாப்பேட்டை, வடபழனி, அசோக் பில்லர், கே.கே.நகா், கோடம்பாக்கம், சாலிகிராமம், ஜாபர்கான்பேட்டை, தி.நகர், ஈக்காட்டுத்தாங்கல், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, கிண்டி, மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். அதேநேரம் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

இதனிடையே தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூா் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NEXT STORY