சென்னை மக்களை குளிர்வித்த கனமழை

தமிழகம்
Updated Jul 15, 2019 | 21:19 IST | Times Now

சென்னையில் இன்று மாலை பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

Heavy rain in chennai, சென்னையில் கனமழை
சென்னையில் கனமழை  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னையில் தேனாம்பேட்டை, அசோக் பில்லர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் மிதமான மழைக்கு வாப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்று மாலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

போரூர், ஐய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, அசோக் பில்லர், ஜாபர்கான் பேட்டை, அயனபாக்கம், சாலிகிராமம், தேனாம்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, கொளத்தூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 

அனகாபுத்தூர், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. மதுரவாயல், வானகரம், நெற்குன்றம், தேனாம்பேட்டை, ஜாபர்கான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

கனமழையின் காரணமாக சாலைகளில் நீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாலையில் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் சிரமப்பட்டனர். இருப்பினும் கனமழையின் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு இருப்பதாலும், குளிர்ச்சியான சூழல் நிலவுவதாலும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...