வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம்
Updated Sep 16, 2019 | 15:29 IST | Times Now

”அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுழல்காற்று, மீனவர்கள் மேற்கண்ட இடங்களுக்கு செல்லவேண்டாம்.”

Regional Meteorological Centre Chennai, சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். தூத்துகுடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக அவர் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புவியரசன் மேலும் கூறியதாவது: ”தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழகம் பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 8 செ.மீ மழையும், தஞ்சை மாவட்டம் கல்லணையில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.” இவ்வாறு புவியரசன் கூறினார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுழல்காற்று, மீனவர்கள் மேற்கண்ட இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் எச்சரித்துள்ளார்.

NEXT STORY
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் Description: ”அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுழல்காற்று, மீனவர்கள் மேற்கண்ட இடங்களுக்கு செல்லவேண்டாம்.”
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
உங்கள் மருமகளை வரவேற்க மற்றொருவர் மகளை கொல்வதா?- சுபஸ்ரீ மரணத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்
உங்கள் மருமகளை வரவேற்க மற்றொருவர் மகளை கொல்வதா?- சுபஸ்ரீ மரணத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு