ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - முழு விவரம்

தமிழகம்
Updated Sep 11, 2019 | 13:31 IST | Times Now

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

Regional Meteorological Centre Chennai, சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 15-ஆம் தேதி மாநிலத்தின் ஒருசில இடங்களில் மழை எதிர்ப்பார்க்கலாம்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசும் உணரப்படும்.

11.09.2019 நிலவரப்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 6 செ.மீ மழை பதிவானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவானது.

NEXT STORY
ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - முழு விவரம் Description: வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles