கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகம்
Updated Sep 12, 2019 | 14:32 IST | Times Now

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Regional Meteorological Centre Chennai, சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புவியரசன் கூறியதாவது: “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 14 செ.மீ மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 13 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில்  8 செ.மீ மழையும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.

NEXT STORY
கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! Description: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles