தமிழகத்தில் மழை பெய்யுமா ? பெய்யாதா ? - வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்

தமிழகம்
Updated May 27, 2019 | 16:34 IST | Times Now

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அனல் காற்றின் தாக்கம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy Rain expected in tamilnadu
Heavy Rain expected in tamilnadu   |  Photo Credit: Times Now

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில்  அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ராயலசீமா முதல் கன்னியாகுமரி கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனத்தினாலும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் திருவள்ளூர் முதல் தேனி வரை உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பாசரில் 5 சென்டிமீட்டரும், நடுவட்டம் மற்றும் கிளன் மார்கனில் 3 சென்டிமீட்டரும், கொல்லிமலை, கொடநாடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 2 சென்டிமீட்டரும், பெருந்துறையில் 1 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

NEXT STORY