செப்டம்பர் 10, 11-ல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம்
Updated Sep 07, 2019 | 13:53 IST | Times Now

அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை எதிர்பார்க்கலாம். 10, 11 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

Regional Meteorological Centre Chennai, சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர தமிழகம், புதுச்சேரி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை எதிர்பார்க்கலாம் என்றும், 10, 11 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டர்ம்பர் 7 நிலவரப்படி நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாறு ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக தலா 5 செ.மி மழை பதிவாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் 4 செ.மி மழை பதிவாகியுள்ளது. வால்பாறை தாலுகா அலுவலகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் தலா 3 செ.மி மழை பெய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மைலாடி, இரணியல் மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பெய்தது. புதுச்சேரி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, குழித்துறை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரில் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

NEXT STORY
செப்டம்பர் 10, 11-ல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் Description: அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை எதிர்பார்க்கலாம். 10, 11 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை