சென்னை சுற்று வட்டாரத்தில் அடுத்த 24 மணி நேரம் கொளுத்தப் போகும் வெயில்!

தமிழகம்
Updated Jun 14, 2019 | 17:45 IST | Times Now

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai city, சென்னை
சூரியன் மாதிரிப்படம்  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், ``கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புண்டு.

எனினும், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்’’ என்று தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், குறைந்தபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

NEXT STORY
சென்னை சுற்று வட்டாரத்தில் அடுத்த 24 மணி நேரம் கொளுத்தப் போகும் வெயில்! Description: அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles