ப்ரேவோ! - கொள்ளையர்களை விரட்டிய நெல்லைத் தம்பதிக்கு ஹர்பஜன், அமிதாப் வாழ்த்து!

தமிழகம்
Updated Aug 13, 2019 | 16:37 IST | Times Now

கொள்ளையர்கிளிடம் இருந்து தப்பித்து அவர்களையும் ஓடவிட்ட வீர தம்பதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தற்போது அவர்களை ஹர்பஜன் சிங், அமிதாப் பச்சனும் புகழ்ந்துள்ளனர்.

நெல்லை தம்பதிக்கு ஹர்பஜன், அமிதாப் பாராட்டு
நெல்லை தம்பதிக்கு ஹர்பஜன், அமிதாப் பாராட்டு  |  Photo Credit: Twitter

திருநெல்வேலியில் முதிய தம்பதியினர் செய்த வீரதீர காரியம் இந்திய அளவில் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. கொள்ளையர்கள் கழுத்தை நெறித்தும், கையில் ஆயுதம் வைத்திருந்ததையும் பொருட்படுத்தாமல் போராடி உயிர் தப்பியுள்ளனர். தற்போது இவர்களை அமிதாப் பச்சன், ஹர்பஜன் சிங் ஆகியோரும் புகழ்துள்ளனர். 

சண்முகவேல், செந்தாமரைதான் இந்த தம்பதிகள். இருவருடைய மகன்களும் வெளியூரில் இருக்க வீட்டில் இவர்கள் திருநெல்வேலியில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்துள்ளனர். நேற்று சண்முகவேல் வாசலில் அமர்ந்து இருக்கும்போது பின் பக்கமாக வந்த கொள்ளையர்கள் இரண்டுபேர் அவரது கழுத்தை துணியால் நெறிக்க, உடனே சத்தம் போட்டார். கணவரின் சத்தம் கேட்டு உள்ளேயிருந்து வந்த செந்தாமரை, பயப்படமால் தைரியமாக கையில் கிடைத்த செருப்பு, நாற்காலி, ஸ்டூல் அனைத்தையும் கொள்ளையர்கள் மேல் தூக்கி வீசி தனது கணவரைக் காப்பற்ற முயன்றார். 

 

பின் சண்முகவேல் சுதாரித்துக் கொண்டு தப்பித்து வீட்டின் உள்ளே செல்லாமல் அந்தக் கொள்ளையர்களை மடக்கிப் பிடிக்க முயல்கிறார். இத்தனைக்கும் அவர்கள் கையில் அரிவாள் வைத்துள்ளார்கள். சிறிது நேரத்தில் கொள்ளையர்கள் இவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இவை அனைத்தும் அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நேற்று முதலே இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இன்று நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் நேரில் சென்று வாழ்த்தினார். தற்போது இந்த வீடியோவைப் பார்த்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ப்ரேவோ என்று புகழ்ந்துள்ளார். அவரைப் போலவே தமிழ்ப் புலவரும் கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங், ஹேட்ஸ் ஆஃப் என்று புகழ்ந்துள்ளார். 

NEXT STORY
ப்ரேவோ! - கொள்ளையர்களை விரட்டிய நெல்லைத் தம்பதிக்கு ஹர்பஜன், அமிதாப் வாழ்த்து! Description: கொள்ளையர்கிளிடம் இருந்து தப்பித்து அவர்களையும் ஓடவிட்ட வீர தம்பதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தற்போது அவர்களை ஹர்பஜன் சிங், அமிதாப் பச்சனும் புகழ்ந்துள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...