மீண்டும் இடைத் தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்!

தமிழகம்
Updated May 24, 2019 | 17:09 IST | Times Now

நான்குநேரி சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளதால் விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.

will soon face a bypoll in the Nanguneri Assembly constituency
மீண்டும் இடைத்தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்  |  Photo Credit: PTI

கன்னியாகுமரி: நான்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஹெச்.வசந்தகுமாா்.  சமீபத்தில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, கன்னியாகுமரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். பாஜக சார்பில் அத்தொகுதியின் சிட்டிங் எம்.பி.யான பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டார்.  

இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும் நேற்று வெளியான தேர்தல் முடிவில் பொன்.ராதாகிருஷ்ணனை பின்னுக்கு தள்ளி வசந்தகுமார் வெற்றி வாகை சூடினார்.  

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 6 லட்சத்து 27 ஆயிரத்தி 235 வாக்குகள் பெற்றிருந்தார். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 67 ஆயிரத்தி 302 வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம்  சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரிடம் தோல்வியை தழுவினார் பொன். ராதாகிருஷ்ணன். 

தற்போது எம்.பியாக தேர்வாகியுள்ளதால் விரைவில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்ய இருக்கிறார். இதனால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வசந்தகுமாரை பொன்.ராதாகிருஷ்ணன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

NEXT STORY
மீண்டும் இடைத் தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்! Description: நான்குநேரி சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளதால் விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.
Loading...
Loading...
Loading...