ஜூலை 12ம் தேதி நடக்கவிருந்த குரூப் 1 தேர்வுக்கு தடை - உயர்நீதிமன்றம்!

தமிழகம்
Updated Jun 12, 2019 | 16:42 IST | Times Now

முதல்நிலை தேர்வு எனப்படும் பிரிலிமினரி தேர்வுக்கான திருத்திய விடைகளை ஏன் தேர்வர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

tamil nadu, தமிழ்நாடு
டிஎன்பிஎஸ்சி   |  Photo Credit: Twitter

சென்னை:  தமிழகத்தில் அரசுப் பணிகளுக்காக ஜூலை 12ம் தேதியன்று நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்னும் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 பதவிகளுக்கான மெயின் தேர்வு ஜூலை 12ம் தேதியன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்நிலை தேர்வு எனப்படும் பிரிலிமினரி தேர்வுக்கான திருத்திய விடைகளை ஏன் தேர்வர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும், இதற்கு டி.என்.பி.எஸ்.சி தரப்பில் இருந்து சரியான பதில் அளிக்காததால் குரூப் 1 மெயின் தேர்வுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜூலை 12ம் தேதியன்று நடைபெற இருந்த மெயின் தேர்வு தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. 

NEXT STORY