சரக்கு ரயில் தடம் புரண்டது: சென்னை - பெங்களூர் விரைவு ரயில்கள் தாமதம்

தமிழகம்
Updated May 21, 2019 | 08:47 IST | Times Now

அரக்கோணம் அருகே இன்று காலை சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Goods Train derailed near Arakkonam
Goods Train derailed near Arakkonam  |  Photo Credit: Facebook

வேலூர்: அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் சென்னை - பெங்களூர் மார்க்கமாக செல்லும் 6 விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

வேலூர், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் அருகே செவ்வாய்க்கிழமை காலை 14 பெட்டிகளுடன் சரக்கு ரயில் வந்துகொண்டிருந்தது. அந்த ரயிலின் 5 மற்றும் 6-வது பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் நிலையம் அருகில் இருந்ததால் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. இதனால் மற்ற பெட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்தால் சென்னையில் இருந்து காட்பாடி மார்க்கமாக செல்லும் மங்களூர், லால்பார்க் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 

மேலும், சென்னை - பெங்களூர் செல்லும் விரைவு ரயில், மேட்டுப்பாளையம், ஆழப்புலா உள்பட 6 விரைவு ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த ரயில்வே பொறியாளர்கள், பணியாளர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளம் சரிசெய்யப்பட்டு ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன. சரக்கு ரயில் பெட்டிகளை பராமரிப்புக்கு அனுப்பாமல் தொடர்ந்து இயக்குவதால் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்வதாக மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

NEXT STORY
சரக்கு ரயில் தடம் புரண்டது: சென்னை - பெங்களூர் விரைவு ரயில்கள் தாமதம் Description: அரக்கோணம் அருகே இன்று காலை சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை