புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை.. சவரன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகம்
Updated Aug 13, 2019 | 16:01 IST | ET Now

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து ரூ.29 ஆயிரத்தை தாண்டியது.

Representative Image
Representative Image   |  Photo Credit: IANS

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ. 29,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் சவரன் ரூ. 30 ஆயிரத்தை எட்டிவிடும் என்கின்றனர். 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருகிறது. சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியே இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து புதிய வரலாறு படைத்து வருகிறது. கடந்த 13 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 உயர்ந்துள்ளது. 

திங்கட்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 அதிகரித்திருந்தது. சவரன் ரூ. 28,824-க்கு விற்பனை செய்யப்பட்டது.  22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 21 உயர்ந்து ரூ 3,603-க்கு விற்பனையாகியது. இன்று காலையும் தங்கத்தின் விலை உயர்ந்து ரூ. 28,896 என விற்பனை செய்யப்பட்டது. 

இந்தநிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் இன்று ஒரே நாளில் ரூ.192 அதிகரித்து சவரன் ரூ. 29,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,627க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினம் தோறும் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை விரைவில் ரூ.30,000 ஆயிரத்தை எட்டிவிடும் என்கின்றனர். இதனால் நடுத்தர குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். 

NEXT STORY
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை.. சவரன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது! Description: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து ரூ.29 ஆயிரத்தை தாண்டியது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...