காலியாகிறதா தினகரன் கூடாரம்? அஇஅதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்!

தமிழகம்
Updated Jun 11, 2019 | 13:10 IST | Times Now

டிடிவி தினகரனின் அமுமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து மீண்டும் அஇஅதிமுகவில் இணைந்துள்ளார்.

அஇஅதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்
அஇஅதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்  |  Photo Credit: Twitter

சென்னை:  டிடிவி தினகரனின் அமுமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து மீண்டும் அஇஅதிமுகவில் இணைந்துள்ளார். மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமுமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத நிலையில், அக்கட்சியில் இருந்து முக்கிய பதவி வகிப்பவர்கள் ஒவ்வொருவராக மீண்டும் அஇஅதிமுகவுக்கு திரும்பி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் திமுக 37 இடங்களில் வெற்றிபெற்றபோதும், 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 இல் மட்டுமே வெற்றிபெற்றது. 9 இடங்களில் வெற்றிபெற்ற அஇஅதிமுக ஆட்சியைத் தொடரும் பலத்தைப் பெற்றது. எனினும், டிடிவி தினகரனின் அமுமுக மக்களவைத் தேர்தலில் பல இடங்களில் 4 வது மற்றும் 5 வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டது. முதன்முறையாக களமிறங்கிய நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை பல்வேறு இடங்களில் 3 வது மற்றும் 4 வது இடத்தைப் பெற்றன.

இதனைத்தொடர்ந்து, அமுமுவில் முக்கிய பொறுப்பில் இருந்த பலர் ஒவ்வொருவராக அஇஅதிமுகவுக்கு திரும்பி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்ட அமுமுக செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் திருநெல்வேலி மக்களைவைத் தொகுதியில் அமுமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கல் ராயப்பன் ஆகியோர் அமுமுவில் இருந்து விலகி அண்மையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அமுமுவில் இருந்து விலகி அஇஅதிமுகவில் இன்று இணைந்துள்ளார். சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து மீண்டும் கட்சியில் இன்பத்தமிழன் இணைந்தார். இன்பத்தமிழன் 2011 முதல் 2016 ஆண்டு காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

NEXT STORY
காலியாகிறதா தினகரன் கூடாரம்? அஇஅதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்! Description: டிடிவி தினகரனின் அமுமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து மீண்டும் அஇஅதிமுகவில் இணைந்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles