10% இட ஒதுக்கீடு... ஸ்டாலின், கமல், சீமான் எதிர்ப்பு!

தமிழகம்
Updated Jul 09, 2019 | 14:17 IST | Times Now

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 % இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்துக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டம்
அனைத்துக் கட்சிக் கூட்டம் pic courtesy: vikatan  |  Photo Credit: Twitter

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 % இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மைய்யம் உட்பட 21 கட்சிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.

மருத்துவப் படிப்பு சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளிடமும் கருத்துக் கேட்கப்பட்டு பின் இந்த திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

 இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கூடியபோது கேள்வி எழுப்பிய ஸ்டாலின் முதலில் அனைத்து கட்சியையும் அழைத்து இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் 21 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் இந்த இட ஒதுக்கீடு சம்பந்தமான கூட்டம் நடைபெற்று வருகிரது. ஆனால் இந்த கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம்தான் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இந்தக்கூட்டத்தில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின்,  திக கட்சியின் கீ.வீரமணி, பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்  கமலஹாசன், பாலகிருஷ்ணா, முத்தரசன் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.

துணை முதல்வர் பேசும்போது தமிழக அரசு தொடர்ந்து 69 % இட ஒதுக்கீட்டை வழங்கி வருகிறது. ஆனால் இந்த 10 % இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசு விண்ணப்பித்தால் கூடுதலாக 1000 பேர் மருத்துவர் இடங்கள் படிக்க முடியும்   என்று தெரிவித்தார். இதுபற்றி தங்களது கருத்துக்களை அரசியல் தலைவர்கள் கூறிவருகிறார்கள். 


தி.மு.க:  திமுக சார்பாகத் தனது  கருத்தை கூறிய மு.க. ஸ்டாலின் காமராஜ,ர் அண்ணா கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை, பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறினார்.

நாம் தமிழர் கட்சி: பொளுதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு தேவை இல்லாதது. அவர்களது பெயரே முன்னேறிய வகுப்பினர். பின் எதற்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு? என்று கூறி இந்த மசோதாவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம்: பொருளாதாரத்தில் நளிவுற்றோருக்கு  10% இட ஒதுக்கீடு என்பது  சமூக நீதிக்கு எதிரானது என்று மக்கள் மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். 

காங்கிரஸ்: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, ‘’69% இடஒதுக்கீட்டுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் 10% இடஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் காங்கிரஸ் இதனை ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட்:   ’69% இடஒதுக்கீட்டுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் 10% இடஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் செயல்படுத்தலாம் என்று காங்கிரஸ் கூறியதையே மார்க்சிஸ்ட் கட்சியும் தெரிவித்தது. 

பா.ஜ.க: பா.ஜ.க சார்பாகப் பேசிய தமிழிசை, இந்த இட ஒதுக்கீடு உயர் சாதியினருகானது என்று நினைக்க வேண்டாம். இது சமூக நீதிக்கு எதிரானது என்று கூறுவது தவறு என்று தெரிவித்தார்.

NEXT STORY
10% இட ஒதுக்கீடு... ஸ்டாலின், கமல், சீமான் எதிர்ப்பு! Description: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 % இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்துக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles